வெளியே சட சடவென மழை…
என்னுள்ளே அவள் நினைவலை…
சில்லென்ற சாரல் காற்றில்
உதடுகள் தேநீர் ருசிக்க,
கண்கள் மழையினை ரசிக்க,
என் மனமோ அவளை நினைக்க…
மழையினால் மண்வாசம்,
அவள் நினைவால் என்னுள் என்றும் காதல் வாசம்..
மழையில் மகிழும் நிலமாய்,
உன் அன்பில் நனைவது எப்போது??
காவேரியை கண்ட தமிழகமாய்
உன்னை கண்டு மகிழ்வது எப்போது??
விண்ணில் உதித்து
மண்ணில் தவழ்ந்து
கடலில் கலக்கும் மழையாய்…
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து வரும் என் தேவதையே…
ஓடி வா.. என்னை தேடி வா…