கல்லூரி காலம்
இதில் வாழும் காலம் இனி எப்போது வாய்க்கும்?
இரு வருட சொர்க்க வாழ்க்கை
இரு நொடியாய் கரைந்தது…
யாரோவென வந்தோம்,
உயிர் நட்பாகி இன்று நிற்கிறோம்…
பேச தயங்கிய காலம் – இன்று
பேசியே கொல்லும் காலமானது…
புகழ் பெற்ற செல்ல பெயர்கள்,
அதனால் மறந்து போன சில நிஜப் பெயர்கள்…
அதிகாலை வகுப்புகள்,
அதிலும் proxy போடும் சில உயர்ந்த உள்ளங்கள்…
திறக்கப்படாத புத்தகம்,
திறக்கப்படும் செல்பேசிகள்,
எழுதப்படாத நோட்டுகள்,
கிறுக்கப்படும் மேசைகள்,
படிக்கப்படாத பாடங்கள்,
பகிரப்படும் தேர்வறை பிட்டுகள் என
பற்பல வகுப்பறை சேட்டைகள்.
நள்ளிரவு அரட்டைகள்,
எமனுக்கும் பயம் காட்டும்
பிறந்தநாள் ஆட்டங்கள்,
சிற்சில சண்டைகள்
பற்பல சேட்டைகள் என
ஓராயிரம் நினைவுகள்…
அதை தாங்கிய
பல நூறு புகைப்படங்கள்…
புகைப்படமாய் ஒருசில
என்றும் நினைவுகளில் பற்பல…
கடமைகளை நிறைவேற்ற
தனித்தனி பாதைகளில் பயணிக்கவிற்கும் நாம்
எங்கு செல்லினும்
ஒரே வானத்தின் கீழே
அன்னை பூமியின் மேலே…
நம்மில் பிரிவில்லை பேதமில்லை,
இக்கல்லூரி  வாழ்வை என்றும் நாம் மறப்பதில்லை…
எங்கு சென்றாலும் இலக்கை அடைய
நற்பாதையில் பயணிப்போம்.